தமிழ் நாடு

அ.தி.மு.க.வின் சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு கொடுத்திருந்தனர். அவர்களிடம் இன்று கட்சியின் தலைமை நிர்வாகிகள் நேர்காணல் செய்தனர்.
கட்சியின் தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று முற்பகலில் நேர்காணல் தொடங்கியது.
அ.தி.மு.க. அவைத்தலைவர் முனுசாமி, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் நேர்காணல் மேற்கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.