அ.தி.மு.க.விலிருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா நீக்கம்!

அன்வர் ராஜா, முன்னாள் அமைச்சர்
அன்வர் ராஜா, முன்னாள் அமைச்சர்
Published on

முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

மறைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர், இவர். அவரின் மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இரு அணிகளுக்கும் இடையில் தனியாகக் கருத்துகளைத் தெரிவித்துவந்தார். குறிப்பாக, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்வதற்கு அதிருப்தி தெரிவித்துவந்தார். 

இந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணி உறுதிசெய்யப்பட்டு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்ட நிலையில், அன்வர் ராஜா திடீரென தி.மு.க.வில் சேர்வதற்காக சற்றுமுன்னர் அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றுள்ளார். 

இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியானநிலையில், உடனடியாக அவரை அ.தி.மு.க.விலிருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com