அந்த அண்ணாமலையா இவர்... பெரியார் பிறந்தநாள் வாழ்த்து!

அண்ணாமலை ட்வீட்
அண்ணாமலை ட்வீட்
Published on

திராவிடர் இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்துவந்த தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். 

”சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவுகூர்ந்து வணங்குகிறோம்.” என்று அண்ணாமலை தன் சமூக ஊடகப் பக்கங்களில் தெரிவித்துள்ளார். 

அவரின் எக்ஸ் பக்கத்தில் காலை 8.46 மணிக்கு வெளியிட்ட பதிவுக்கு ஆறு மணி நேரங்களில் 15 இலட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com