தமிழ் நாடு

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அந்தமான் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இந்தப் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 24 ஆம் தேதி அன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.