அன்பில் மகேஸ் முன்ஜாமின் மனு தள்ளுபடி!

அன்பில் மகேஸ்
அன்பில் மகேஸ்
Published on: 

தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தாக்கல்செய்த முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 

முந்தைய தி.மு.க. ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதில் 100 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றதாக மகேஸ் மீது ஊழல் தடுப்புத் துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். அதில் மகேசிடம் விரைவில் விசாரிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 

அவரைக் கைதுசெய்த பிறகே விசாரணை நடத்தப்படும் எனத் தெரியவருகிறது. 

அவரின் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்துக்கும் அவரின் தரப்பில் முறையிடப்படலாம் என்றும் எந்நேரமும் அவர் கைதுசெய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com