தமிழ் நாடு
பா.ம.க. தலைவர் அன்புமணி தலைமையிலான குழுவினர் நாளை நடத்தவுள்ள அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்துக்கு உயர்நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதனால் அந்தக் கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, அக்கட்சியின் நிறுவனர் இராமதாசு, அன்புமணி குழு நடத்தும் இக்கூட்டத்துக்குத் தடைவிதிக்கக் கோரி வழக்கு தொடுத்திருந்தார். அம்மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்தார்.
அதற்கு முன்னர், அன்புமணியிடமும் காணொலி மூலம் இராமதாசிடமும் அவர் விசாரணை நடத்தினார்.