தமிழ் நாடு
பா.ம.க. தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுச்செயலாளராக வடிவேல் இராவணனும் பொருளாளராக திலகபாமாவும் மீண்டும் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விதிப்படி கட்சியின் தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றாலும், சட்டப்பேரவைத்தேர்தல் வரவுள்ளதை முன்னிட்டு ஆணையத்தின் அனுமதிப்படி ஓராண்டுக்கு பதவிக்காலத்தை நீட்டிப்பது என பொதுக்குழுவில் முடிவுசெய்யப்பட்டுள்ளது.