தமிழ் நாடு
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சளிப் பிரச்னை காரணமாக சென்னை, ஆயிரம்விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்றுவரும் அவரை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார். அவருடைய குடும்பத்தாரிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தார்.
அவரைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் நலம்விசாரித்தார்.
முன்னதாக, நேற்று அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பா.ம.க. நிறுவனர் இராமதாசையும் இருவரும் நேரில் நலம் விசாரித்தனர்.