அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!

அமெரிக்கா, இஸ்ரேலைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்!
Published on

ஈரான் மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டுத் தலைவர்களைக் கொன்றொழித்த அமெரிக்க- இஸ்ரேல் படைகளைக் கண்டித்து சென்னையில் இன்று இடதுசாரிகள், வி.சி.க. கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., சிபிஐ (எம்-எல்)எல் நிர்வாகி கிருஷ்ணவேணி ஆகியோர் தலைமைவகித்தனர்.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இன்று ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com