அர்ஜூன் சம்பத் மீது எம்-எல் தாக்குதல்: எடப்பாடி கண்டனம்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

அர்ஜூன் சம்பத் மீதான தாக்குதலுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.  

”இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் ஒரு வழக்கு விசாரணைக்கு திருச்சியிலுள்ள முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு செல்லும்போது மார்க்சிய-லெனினிஸ்ட் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படும் சிலர் அவரை தாக்கியுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. அர்ஜுன் சம்பத் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.” என்று அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

”சமுதாயப் போராளியாக இருக்க கூடிய அர்ஜுன் சம்பத்தைத் தாக்கிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” என்று பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com