ஆட்சியரிடம் பாலியல் துன்புறுத்தல்- உதயநிதி தகவலுக்கு டிஜிபி மறுப்பு!

Published on: 

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. த.வெ.க. அருள் விக்னேஷ் விவகாரத்தில் அவரைக் கைதுசெய்யக் கோரி டிஜிபியிடம் நேரில் மனு அளிக்க உதயநிதி இன்று காலையில் சென்றார். அவர் வெளியில் சென்றுவிட்டதால் மனுவை அலுலகத்தில் அளித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி, ஜூலை மாதமே பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துவிட்டார்; ஆனால் விஜய் அரசாங்கம் 4 மாதங்களாக 116 நாள்களாக நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக்கொண்டிருந்தது என்று கூறினார். 

அவருடைய இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கும்வகையில், திருவல்லிக்கேணி போலீஸ்நிலையத்தில் ஊடகத்தினரிடம் பேசிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், ஆட்சியர் தரப்பில் நேற்றுமுன்தினம்தான் புகார் அளிக்கப்பட்டது; அன்றே வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது; சட்டப்படி இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் கூறி, மற்ற அரசியல் கேள்விகளுக்குள் போகமுடியாது என முடித்துக்கொண்டார்.