
சட்டமன்றப் பொதுத் தேர்தல் அறிவிப்பு நெருங்கும் நிலையில்,
அ.தி.மு.க. முதல்கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.
அதன் விவரம்:
1. மகளிர் நலன்: (குல விளக்குத் திட்டம்)
2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்
3. அனைவருக்கும் வீடு: (அம்மா இல்லம் திட்டம்)
4. 100 நாள்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்
இதில், ’குலவிளக்கு திட்டப்’-படி, அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாவதாக, நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும்; ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.