ஆபாசப் பேச்சு- உதயநிதியைக் கைதுசெய்தது தஞ்சை போலீஸ்!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

தஞ்சையில் காவிரிப் போராட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் தொனிக்கப் பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியது. 

இதுதொடர்பாக அவர் மீது தஞ்சை காவல்துறையினர் 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு, சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அதைத் தொடர்ந்து, சென்னை, நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டிற்குச் சென்ற தஞ்சை காவல்துறையினர் அவரைக் கைதுசெய்ய வந்துள்ளதாகத் தெரிவித்தனர். அதற்கு அங்கிருந்த முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

உதயநிதியின் வீட்டிற்கு வெளியிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீட்டுக்குள் செல்லமுயலும் கட்சி நிர்வாகிகளை காவலர்கள் தடுப்பரண்கள் அமைத்து கடுமையாகத் தடுத்துவருகின்றனர். 

இந்த நிலையில், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் அங்கு வந்திருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.  

logo
Andhimazhai
www.andhimazhai.com