
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம், 2025-2026-ம் கல்வியாண்டிற்கான டிப்ளமோ (DIP / DNT) மருத்துவ பட்டயப் படிப்புகள் முதலாம் இறுதி கட்ட கலந்தாய்விற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை, ஆணையர் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:
”1. 2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை மற்றும் பாளையங்கோட்டையில் உள்ள அரசு ஆயுஷ் துணை மருத்துவ பட்டயப்படிப்புப் பள்ளிகளில் மீதமுள்ள காலி இடங்களுக்கான (DIP / DNT) பட்டயப்படிப்புகள் சேர்க்கைக்கான முதலாம் இறுதிகட்ட கலந்தாய்விற்கு இணையவழி விண்ணப்பங்கள் (Online Applications) தகுதியுள்ளவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
2. (DIP / DNT) பட்டயப்படிப்புகளுக்கான (தகவல் தொகுப்பேட்டினை, www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்கின்ற வலைதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
3. இணையவழியில் மட்டுமே (Online Applications) விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். வேறு எந்த வழிகளிலும் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
4. ஏற்கனவே விண்ணப்பித்து முதல் இரண்டு கட்ட கலந்தாய்விலும் இடம் கிடைக்காதவர்கள், முதல் இரண்டு கட்ட கலந்தாய்வில் இடம் கிடைத்தும் சேராதவர்கள், இடைநிறுத்தம் செய்தவர்கள், மீண்டும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தாமல் பதிவு செய்துகொண்டு இக்கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.
5. இறுதி கட்ட கலந்தாய்வு காலியிடத் தேர்வு நிரப்புதலுக்குத் தகுதியற்றவர்கள்: முந்தைய சுற்றுகளில் ஏதேனும் ஒன்றில் DIP / DNT பாராமெடிக்கல் படிப்புகளில் சேர்ந்து இந்த சுற்று வரை படித்துக்கொண்டிருப்பவர்கள்.
6. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், விண்ணப்பக் கட்டணம் மற்றும் பிற கட்டண விவரங்கள், கலந்தாய்விற்கான அட்டவணை மற்றும் பிற தகவல்களினை www.tnhealth.tn.gov.in., www.tnayushselection.org. என்கின்ற வலைதளங்களில் உள்ள அறிவிக்கை மற்றும் உரிய தகவல் தொகுப்பேட்டில் அறியலாம்.
7. விண்ணப்பக் கட்டணம், இணையவழி கலந்தாய்வுக் கட்டணம், கல்விக் கட்டண முன்பணம் இவை அனைத்தும் இணையவழி மூலமாக மட்டுமே செலுத்தவேண்டும்.
அறிவிக்கை வெளியான நாள்
10.01.2026
இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய துவங்கும் நாள்
10.01.2026 முதல்
இணையவழி விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி நாள்
12.01.2026 மாலை 5.00 மணி வரை” என்று இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை, ஆணையர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.