இந்தித் திணிப்பு தொழில்நுட்பக் கோளாறாம்- எல்.ஐ.சி.விளக்கம்!

LIC
Published on

வாழ்நாள் காப்பீட்டுக் கழகம்- எல்.ஐ.சி.யின் இணையதளத்தில் திடீரென இந்தி மட்டுமே இடம்பெறும்படியாக மாற்றம் செய்யப்பட்டது. மதுரை மக்களவைத்தொகுதி உறுப்பினரான மார்க்சிஸ்ட் கட்சியின் சு. வெங்கடேசன் இதுகுறித்து இன்று காலை கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். 

அதையடுத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இதற்கு தன் கண்டனத்தைப் பதிவுசெய்தார். 

முதலமைச்சர் ஸ்டாலின் இந்தித் திணிப்பைக் கண்டித்ததை அடுத்து, எல்.ஐ.சி. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com