தமிழ் நாடு
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் செய்யாத நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என சில மாதங்களுக்கு முன்னர் டிரம்ப் அறிவித்திருந்தார். அதன்படி, சீன நாட்டுக்கு 100 சதவீதத்துக்கும் கூடுதலாக வரி விதிக்கப்பட்டது. பின்னர் பதிலுக்கு சீன அரசும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதித்தது.
அதன்படி இந்தியாவுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைவதாக இருந்தது.
இந்த நிலையில், டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சமூக ஊடகப் பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.