
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமியும் டிடிவிதினகரனும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, அவர்களிடம் இருவரும் முன்னர் கண்டபடி விமர்சனம் செய்திருக்கிறீர்களே; இப்போது மக்களிடம் போய் எப்படி இதைப் பிரச்சாரம் செய்வீர்கள் எனக் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த பழனிசாமி, ”வைகோவைப் போல திமுகவை மோசமாகப் பேசியவர் யாரும் உண்டா? இந்திரா காலத்தில் அவசரநிலை, மிசா சட்டத்தால் அதிகமாகத்துன்புறத்தப்பட்டோம் எனதிமுக சொன்னது, பிறகு கூட்டணி வைக்கவில்லையா?ஏன்... அறிவாலயத்தில் மேல் மாடியில் ரெய்டு சோதனை நடைபெற்றது; கீழே கூட்டணிப் பேச்சுவார்த்தை... இதையெல்லாம் கேட்கிறீர்களா?” என எதிர்க்கேள்வி கேட்டார்.
நாங்கள் எல்லாம் அம்மா வளர்த்த பிள்ளைகள்; கருத்து வேறுபாடுகளை மறந்துவிட்டோம் என்றும் அவர் கூறினார்.
தினகரனோ, “ எங்களுக்குள் இருந்தது கூட்டுக் குடும்பப் பிரச்னை. மனஸ்தாபம் இருந்தது உண்மைதான். அதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஒன்றுசேர்ந்துள்ளோம். 2017க்கு முன்னர் எப்படி அண்ணன்தம்பியாக இருந்தோமோ அதேபோல இனியும் செயல்படுவோம்.” என்று கூறினார்.
இருவரும் கூட்டாகப் பிரச்சாரம் செய்வோம்; இதையே பேசுவோம் என்றும் அவர் சொன்னார்.