இன்னொரு பெண் அதிகாரி புகார்- தி.மு.க. எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு!

Published on: 

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பெண்ணுக்குஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆளுநரிடம் இன்று காலையில் நேரில் சென்று புகார் அளித்தார். 

அதையடுத்து, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு, சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். 

இந்நிலையில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு பெண் அதிகாரி தியாகதுருகம் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தன்னை மிரட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அவரது புகாரின்பேரில் கார்த்திகேயன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.