இம்மானுவேல் சேகரனின் 68ஆவது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரின் நினைவிடத்தில் துணைமுதலமைச்சர் உதயநிதி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் சாத்தூர் இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், இராஜ. கண்ணப்பன், மூர்த்தி, முன்னாள் ஆதிதிராவிடர் நலத்துறை- இப்போதைய மனிதவளத் துறை அமைச்சர் கயல்விழி, இராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, சண்முகையா, மாவட்ட ஆட்சியர் சிம்ரஞ்சித் சிங் காலோன் ஆகியோர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் நேரடியாக மரியாதை செலுத்திவருவதை உதயநிதி விடாமல் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.