இராஜேந்திர சோழன் விழாவில் பெயர் இல்லை- தொண்டர்கள் கோபம்!

இராஜேந்திர சோழன் நாடக விழாவில்
இராஜேந்திர சோழன் நாடக விழாவில்
Published on

சோழ மன்னன் இராஜேந்திரனின் பிறந்த நாளாகக் கருதப்படும் ஆடி மாதம் திருவாதிரை நாளான இன்று அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

காலையில் மாநில அரசின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊடகங்களில் முன்னரே விளம்பரங்கள் தரப்பட்டிருந்தன. அதே விளம்பரமே சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது. 

தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், சிவசங்கர், இராஜேந்திரன் ஆகிய நான்கு அமைச்சர்கள் பெயர்களையும் குறிப்பிட்டுவிட்டு, அந்தப் பகுதி இடம்பெறும் சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யான திருமாவளவனை அழைக்கவில்லை; அவரின் பெயரையும் குறிப்பிடவில்லை என வி.சி.கட்சியினர் சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். ஆனால், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலரும் பங்கேற்பர் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.  

இந்நிலையில், மைய அரசின் சார்பில் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சார்பில் நாடக விழா நடைபெற்றது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத் துறையினர் உட்பட பல்வேறு குழுக்களின் கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com