தமிழ் நாடு
பா.ம.க. நிறுவனர் இராமதாசு தன் மகன் அன்புமணியைக் கட்சியைவிட்டு நீக்கியதாக வெளியிட்ட அறிவிப்பு செல்லாது என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் கே.பாலு சென்னையில் கூறியுள்ளார்.
அண்மையில் தேர்தல் ஆணையமே முறைப்படி தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளில் அன்புமணியின் தரப்பை அங்கீகரித்தது 2026வரை செல்லுபடியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
கட்சி விதிகளின்படி தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோருக்குதான் அதிகாரம் என்றும் பாலு கூறினார்.
இராமதாசு தைலாபுரத்தில் இன்று அன்புமணி மீது கூறிய விமர்சனங்கள் பற்றி கேட்டதற்கு, இரண்டு மாதங்களாக அவர் பல்வேறு கருத்துகளைக் கூறிவருகிறார்; எனவே நான் பதில்கூறுவது அழகாக இருக்காது என்றார் பாலு.