இலங்கைத் தூதரக அதிகாரியின் வாட்சாப் முடக்கமா?- போலீசில் புகார்!

சென்னை, இலங்கைத் துணைத்தூதரகம்
சென்னை, இலங்கைத் துணைத்தூதரகம்
Published on

இந்தியாவுக்கான இலங்கை துணை உயர் ஆணையர் அலுவலகம் சென்னை, நுங்கம்பாக்கத்தில் இயங்கிவருகிறது. லயோலா கல்லூரி அருகில் உள்ள இந்த அலுவலகத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றுபவர், துரைசாமி வெங்கடேசுவரன். 

இவருடைய செல்பேசியில் உள்ள வாட்சாப் செயலி கடந்த 5ஆம் தேதி முதல் திடீரென வேலைசெய்யவில்லை. முதல் கட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தன்னுடைய வாட்சாப் முடக்கப்பட்டிருக்கலாம் என அவர் முடிவுக்கு வந்தார். 

அதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு சென்னை, சேத்துப்பட்டு இணையக்குற்றப் பிரிவு காவல்துறையினரிடம் அவர் புகார் மனு அளித்தார். 

அதன்படி, அவரின் வாட்சாப் முடக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com