தமிழ் நாடு
இளம் எழுத்தாளரும் நக்கலைட்ஸ் குழுவின் முன்னாள் உறுப்பினருமான நிஜந்தன் கோவையில் இன்று காலமானார். அவருக்கு வயது 31.
பிறழ் எனும் நாவலை எழுதிய இவர், மனச்சிதைவு நோயால் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார்.
கோவை, பெங்களூரில் தொடர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக, நேற்று கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
அவருடைய மறைவுக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.