இளையராஜா நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

இளையராஜா நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
Published on

சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்
இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு - 50 எனும் நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெறவுள்ளது.

மாநில அரசின் செய்தி, விளம்பரத் துறையால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 5.30 மணியளவில் இவ்விழா நடைபெறுகிறது.

”இவ்விழாவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் விழா நேரத்திற்கு முன்னதாகவே வருகை தரவேண்டும். பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்ட  அனுமதி அட்டையை (Admit Card) நுழைவிடத்தில் காண்பித்த உடன் அவர்களுக்கு கைப்பட்டை (Wrist Band) வழங்கப்படும்.  இதற்கென அமைக்கப்பட்டுள்ள 8 சிறப்பு கவுண்ட்டர்களில்   (Counters) பார்வையாளர்கள் காலை 10.00 மணி முதல் அனுமதி அட்டையை காண்பித்து இந்த கைப்பட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

கைப்பட்டையை கையில் அணிந்து கொண்டு  நிகழ்ச்சி அரங்கிற்குள் சென்று பார்வையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.” என்றும் அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com