அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்துள்ள இஸ்ரேல் அரசைக் கண்டித்து, சென்னையில் இன்று மாலையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. புதுப்பேட்டை பகுதியில் பேரணியும் நிறைவாகப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
வி.சி.க. தலைவர் திருமாவளவன், ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா, தி.வி.க. தலைவர் கொளத்தூர் மணி, த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் கருணாஸ், ம.ஜ.க. தலைவர் தமிமுன் அன்சாரி, தனியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், தமிழர் விடியல் கட்சி இளமாறன், ம.தி.மு.க. வந்தியத்தேவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டாக்டர் இரவீந்திரநாத், டாக்டர் சாந்தி, நடிகர்கள் சத்யராஜ், பிரகாஷ் ராஜ், தீனா, இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் ஆகியோர் உட்பட பலரும் பேசினர்.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.