உயரவளர்ச்சி குறைவான 400 பேருக்கு ஸ்கூட்டர்கள்!

உயரவளர்ச்சி குறைவான 400 பேருக்கு ஸ்கூட்டர்கள்!
Published on

உயரவளர்ச்சி குறைவான 400 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் அல்லது மின்கலனால் இயங்கும் ஸ்கூட்டர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் விஜய்யின் மாற்றுத்திறனாளிகள் நலன் துறையின் அறிவிப்பை சமூகநலத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி அவையில் வாசித்தார். 

முன்னதாக, ஒரு கால் பாதிக்கப்பட்டு, கைகள் நன்றாக்ச் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2023-24ஆம் நிதியாண்டு முதல், பிரத்யேக சக்கரங்கள் பொருத்தப்பட்ட இந்த வகை ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த அறிவிப்பின் மூலம் அரசு 4 கோடி ரூபாய் செலவில் உயரவளர்ச்சி குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com