உயிர்நிகர் தமிழ்- மொழி உரிமைப் போராட்ட சிறப்பு இணையப் பக்கம் வெளியீடு!

உயிர்நிகர் தமிழ்- மொழி உரிமைப் போராட்ட சிறப்பு இணையப் பக்கம் வெளியீடு!
Published on

தகவல்நுட்பத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில், உயிர்நிகர் தமிழ் எனும் ஆவணமும் சிறப்பு இணையதளப் பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. 

துறையின் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று மாலை கோட்டூர்புரத்தில் உள்ள கல்விக்கழக வளாகத்தில் இதை வெளியிட்டார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.  

இணையப் பக்கத்தையும் அமைச்சர் தியாகராஜன் தொடங்கிவைத்தார்.  

இந்த சிறப்புப் பக்கத்தில் மொழியிரிமை, மொழிப் போராட்டம் தொடர்பான 74 நூல்கள் மின்னிதழாக வெளியிடப்பட்டுள்ளன. 

மேலும், மொழிப் போராட்டம் தொடர்பான 252 இதழ் நறுக்குகளும் இடம்பெற்றுள்ளன.  

அரிய புகைப்படங்களுடன் முக்கியமான அரசாணைகள், சட்டமன்ற விவாதங்கள், ஆய்வறிக்கைகள் ஆகியவையும் இதில் வெளியிடப்பட்டுள்ளன. 

https://tamildigitallibrary.in/tamilpride
logo
Andhimazhai
www.andhimazhai.com