தமிழ் நாடு

அ.தி.மு.க.வின் சார்பில் வெளிவந்துகொண்டிருந்த நமது அம்மா நாளேட்டை, எஸ்.பி.வேலுமணி தன்வசம் வைத்துக்கொண்டார். அதன் நிறுவனர் என எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலாக வேலுமணியின் பெயர் மாற்றப்பட்டது.
இரு பிரிவுகளாகப் பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க.வில், எடப்பாடி தரப்பின் செய்திகளை வெளியிட்டுவந்த நியூஸ் ஜெ தொலைக்காட்சி, நமது அம்மா நாளேடு இரண்டுமே எதிரணியின் கைக்குப் போய்விட்டது. இதனால் பழனிசாமியின் தரப்புச் செய்திகளை வெளியிடுவதற்கு எந்த ஊடகமும் இல்லாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், ம.தி.மு.க.வை வைகோ தொடங்குவதற்கு முன்னர் அவருடைய ஆதரவாளர்கள் நடத்திய போர்வாள் எனும் பெயரில் எடப்பாடி தரப்பு நாளேடாகக் கொண்டுவர முடிவுசெய்தது. அதற்கான அச்சிதழை இன்று காலையில் சென்னையில் பழனிசாமி வெளியிட்டார்.