எட்டயபுரம் விபத்து- சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு!

சாலை விபத்து (மாதிரிப்படம்)
சாலை விபத்து (மாதிரிப்படம்)
Published on

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இன்று நேர்ந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 

சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன் குடும்பத்துடன் திருச்செந்தூர் காரில் சென்றார். கோயிலுக்குச் சென்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக்கொண்டு இருந்தபோது, எட்டயபுரம் அருகே எம்.கோட்டூர் விலக்கு அருகே காருக்கு முன்னால் ஒரு லாரி சென்றுகொண்டிருந்தது. 

அதிவேகத்தில் சென்ற கார், லாரியின் பின்பாகத்தில் கடுமையாக மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுமையாக சேதம் அடைந்தது. 

கார்ஓட்டுநர் பழனி, பாஸ்கரன் உட்பட நால்வர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 

அவரின் இரண்டு குழந்தைகளும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.    

logo
Andhimazhai
www.andhimazhai.com