எதிர்க்கட்சி ஓடிவிடக்கூடாது-விஜய்; அவரே ஓடினார்- உதயநிதி

எதிர்க்கட்சி ஓடிவிடக்கூடாது-விஜய்; அவரே ஓடினார்- உதயநிதி
Published on

சட்டப்பேரவையில் இன்று காவல் துறை, தீயணைப்புத் துறைஆகியவற்றின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய துறையின் அமைச்சரான முதலமைச்சர் விஜய், அறிவிப்புகளை வெளியிட்டார்.

பின்னர் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, இந்த ஆட்சி வந்து 116 நாள்கள் ஆகியுள்ள நிலையில், 550 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக சில சம்பவங்களைப் பட்டியலிட்டார்.

அவருடைய பேச்சின்போது, பதில் அளித்துப் பேசவேண்டிய முதலமைச்சர் விஜய் பேசாமல் அமர்ந்திருந்த நிலையில், அமைச்சர்கள் ராஜ்மோகனும் ஆதவ் அர்ஜூனும் ஆனந்தும் எழுந்து பதிலளித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் திடீரென எழுந்த விஜய், அவையில் கேள்வி எழுப்பிய உறுப்பினர்களுக்கு திங்களன்று பதில் அளிக்க இருப்பதாகக் கூறினார். அத்துடன், அப்போது எதிர்க்கட்சியினர் ஓடிவிடக்கூடாது என உத்தரவாதம் தரமுடியுமா என்றும் அவர் கேட்டார்.

அதற்கு பதில்சொல்ல எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி எழுவதற்குமுன்னரே, விஜய் அவையிலிருந்து வேகவேகமாக நடையைக் கட்டினார்.

உடனே, இப்போது யார் ஓடினார்கள் என்பதை எல்லாரும் பார்த்திருப்பீர்கள் என்று குறிப்பிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com