இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை எனக் கேட்டு சமூக ஊடகக் காணொலிப் பரப்புரையைத் தொடங்கியிருக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தேர்தல் அறிவிக்கைக்குப் பின்னர், முதன்முறையாக இப்படியான சிறப்புக் காணொலி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், உரிமைத் தொகை, காலை உணவுத் திட்டம், விடியல் பயணம், பட்டா என தி.மு.க. ஆட்சியின் பல திட்டங்களின் பயன் விவரங்களை அவர் எடுத்துக் கூறியுள்ளார்.
”எங்கள் மேடைகளில்,
தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைத்துக் கொண்டிருக்கும் சாதனைகளையும், அவற்றால் பயனடைந்தவர்கள் குறித்தும் தரவுகளோடு சொல்லிக் கொண்டிருக்கிறோம்!
மறுபுறம்,
சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவதற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களையும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டிருக்கின்றனர்!
தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வளர்ச்சியைத் தரும் விடியலையே நம் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்” என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.