தமிழ் நாடு
த.வெ.க. தலைவர் விஜய் தன் விவாகரத்து விவகாரத்தைக் கடந்துசெல்ல வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது முற்றிலும் தனிப்பட்ட விவகாரம் என்றும் எனவே இதைப் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
பொது வாழ்க்கைக்கு வந்தபிறகு தனிப்பட்ட விசயங்கள் தோண்டப்படுவது வழக்கம்தான் என்றும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் போன்றவர்களுக்கெல்லாம் இதுதான் நடந்தது என்றும் விஜய் இதைக் கடந்துசெல்ல வேண்டும்; இதைத்தாண்டிதான் அவரது அரசியல் இருக்கிறது என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார்.