எழுதிவைத்தபடி நல்லகண்ணுவின் உடல் தானம்!

ஆர். நல்லகண்ணு
ஆர். நல்லகண்ணு
Published on

மறைந்த முதுபெரும் தலைவர் நல்லகண்ணு விரும்பி, எழுதிவைத்துச் சென்றபடி அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக தானமாக அளிக்கப்படுகிறது. 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் சென்னை, இராஜீவ்காந்தி மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்தார். 

இன்று மாலை 5 மணி முதல் அன்னாரின் உடலானது, இ. கம்யூ. கட்சியின் மாநிலக் குழு அலுவலகமான தியாகராயர் நகர், பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும்,

நாளை பிற்பகல் 3 மணியளவில் அங்கிருந்து கம்யூ. கட்சி தோழர்களின் அணிவகுப்போடு சென்னை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அதன் இராஜீவ்காந்தி மருத்துவமனையில் கையளிக்கப்படும் என்றும் வீரபாண்டியம் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com