எஸ்ஐஆர் : ஸ்டாலின் சொன்ன ஆலோசனை- உதயநிதி பேட்டி

எஸ்ஐஆர் : ஸ்டாலின் சொன்ன ஆலோசனை- உதயநிதி பேட்டி
Published on

சென்னை மெரினா கடற்கரையில் இரவு நேரக் காப்பகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆரம்பத்தில் இருந்தே SIR திட்டத்திற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். இந்தக் கால அவகாசம் போதாது என்று சொல்லியிருக்கிறோம். முக்கியமாக பீகாரில் SIR அறிவித்து யாருடைய வாக்குகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கிறது என்று தெளிவாக முதலமைச்சர், தலைவர்தான் சொன்னார். எதிர்பார்த்ததைவிட அதிகமான வாக்குகளை நீக்கியிருக்கின்றார்கள். 97 இலட்சம் நீக்கியிருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 14 இலட்சம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது, எங்களுடைய தலைவர் அவர்கள், தெளிவாக அத்தனைபேருக்கும் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். நீக்கப்பட்ட வாக்குகள், விடுபட்டுபோனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் இவர்களையெல்லாம் எப்படி சேர்ப்பது என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார்.” என்று கூறினார். 

”பொதுமக்கள் சென்று அவர்கள் வாக்குகள் எல்லாம் இருக்கிறதா என்று சரிபார்க்க வேண்டும். அங்கு இருக்கக்கூடிய நம்முடைய வாக்குச்சாவடி முகவரைத் தொடர்பு கொண்டால், நிச்சயம் அதையெல்லாம் சேர்ப்பதற்கு, ஜனவரி 18வரை நேரம் உள்ளது மீண்டும் சேர்ப்பதற்கு, எனவே அந்த பணிகளில் ஈடுபடுத்துவதற்கு நாங்கள் வலியுறுத்துவோம்.” என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com