தமிழ் நாடு
தமிழ்நாடு வாழ் தெலுங்கு மக்களை இழிவுபடுத்திப் பேசிய நடிகை கஸ்தூரி மீது பல மாவட்டங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.
சென்னை மாநகர காவல் துறையும் அவர் மீது நான்கு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அது குறித்து அவரிடம் விசாரிக்க முற்பட்டபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரிய வந்தது.
இதனிடையே உயர்நீதிமன்றத்திலும் கஸ்தூரி முன்பிணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்; அது நிராகரிக்கப்பட்டது.
இந்த நிலையில் கஸ்தூரியைக் கைது செய்வதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர் ஆந்திராவில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதையடுத்து, அங்கு சென்ற சென்னை மாநகர காவல் துறையினரால் ஐதராபாத்தில் தங்கி இருந்த கஸ்தூரி இன்று கைது செய்யப்பட்டார்.