ஓனர் வழியில் மருத்துவப் பணியாளர்களைக் கைதுசெய்யும் விஜய் அரசு - உதயநிதி

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்
Published on: 

தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லிக்கு போராட செல்லும் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்யும் ஓனர்களின் பாணியில், பணி நிரந்தரம் முதலிய  கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைக்கு வந்து போராடவிருந்த பன்னோக்கு மருத்துவப்பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கும் இந்த சோபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறியிருக்கிறார்.

”ஆட்சிக்கு வருவதற்குமுன் மருத்துவப் பணியாளர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போராட்டத்திற்குப் புறப்படும்முன்னரே வீட்டில் வைத்து கைதுசெய்யும் அளவுக்கு இந்த ரீல்ஸ் அரசு அராஜகம் செய்வது ஏன்?

விவசாயிகள் - மாணவர்கள் - செவிலியர்கள் என ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர்தான் மாற்றமா?

மருத்துவப் பணிகளின் முதுகெலும்பாக இருக்கும் பன்னோக்குப் பணியாளர்களை உடனே விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த டம்மி முதலமைச்சர் முன்வர வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் உதயநிதி தன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com