தமிழ்நாட்டு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதியத் திட்டம் பழையதை ஒப்பிட சவலைக் குழந்தையாகவே உள்ளது; நல்ல போஷாக்கை அளித்து புதிய அரசாணையைப் பிறப்பிக்க வேண்டும் என்று தலைமைச்செயலக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
முதலமைச்சருக்கு அச்சங்கம் ஆறு கோரிக்கைகளையும் இப்போது வைத்துள்ளது.
“ ஊதியத்தில் பிடிக்கப்படும் 10 சதவீதத் தொகையை முற்றிலும் இரத்து செய்யவேண்டும்.
இதுவரை பிடிக்கப்பட்ட தொகையை பழைய ஓய்வூதியத் திட்டத்தைப் போல பொது வருங்கால வைப்புநிதிக் கணக்காக மாற்றவேண்டும்.
பணி ஓய்வின்போது பொது வருங்கால வைப்புநிதியை அசலும் வட்டியுமாகத் திரும்ப வழங்கவேண்டும்.
பொது வருங்கால வைப்பு நிதியிலிருந்து தற்காலிக முன்பணம் பெறும் வசதியை வழங்கவேண்டும்.
பணி ஓய்வின்போது 15 ஆண்டுகளுக்கான ஓய்வூதியத்தைத் தொகுத்து வழங்கவேண்டும்.
மிகக் குறுகிய காலத்தில் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் இறக்க நேரிட்டால் அவர்களின் சேமிப்புத் தொகையை வட்டியுடன் வாரிசுக்கு வழங்கவேண்டும்.” என்று தலைமைச்செயலக சங்கம் முதலமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளது.