தமிழ் நாடு
அ.தி.மு.க.வில் அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அன்வர் ராஜா, அண்மையில் கட்சிதாவி எதிரணியில் உள்ள தி.மு.க.வில் சேர்ந்தார். இந்நிலையில் அவருக்கு தி.மு.க.வின் இலக்கிய அணித் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புலவர் இந்திரகுமாரியும் அ.தி.மு.க.விலிருந்து தி.மு.க.வுக்கு வந்து இந்தப் பதவியில் இருந்துவந்தார். கடந்த ஆண்டு ஏப்ரலில் அவர் காலமானார். அதன்பிறகு அந்தப் பதவிக்கு அன்வர் ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.