தமிழ் நாடு
சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க. பேச்சுவார்த்தைக் குழுவினருடன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் குழுவினர் இன்று முற்பகல் சந்தித்துப் பேசினர்.
அப்போது, கமல் கட்சியின் தரப்பில் விருப்பப் பட்டியலைக் கொடுத்தனர்.
ம.நீ.ம. சார்பில் துணைத்தலைவர் மௌரியா, பொதுச்செயலாளர் அருணாச்சலம் உட்பட நான்கு பேர் கலந்துகொண்டனர்.
சம்பிரதாயமான பேச்சுக்குப் பிறகு அவர்கள் வெளியே வந்தனர்.