கம்யூனிஸ்ட்டுகளுடன் வம்பு... சர்ச்சைக்குரிய வட்டாட்சியருக்கு நோட்டீஸ்!

கம்யூனிஸ்ட்டுகளுடன் வம்பு... சர்ச்சைக்குரிய வட்டாட்சியருக்கு நோட்டீஸ்!
Published on

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் பணியாற்றியபோது கம்யூனிஸ்ட் கட்சியினருடன் வரம்பைமீறி வம்பிழுத்து அண்மையில் சர்ச்சைக்கு உள்ளானார், வட்டாட்சியர் அய்யாச்சாமி.

அவரைன் செயல்பாட்டைக் கண்டித்து இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதையடுத்து, அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

பதினைந்து நாள்களுக்குள் அவர் தன்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாகத் துறை ஆணையரகம் அவருக்கு அறிவிக்கை அனுப்பியுள்ளது.

அவரின் பதிலைத் தொடர்ந்து மேல்நடவடிக்கைகள் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, இந்தப் பிரச்னைக்காக அவரை குஜிலியம்பாறையிலிருந்து மீண்டும் சென்னைக்கே இடத்தை மாற்றியதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் அதில் இரு இடதுசாரி கட்சிகளும் அதிருப்தியை வெளிப்படுத்தியதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com