கருணாநிதி சிலை அவமதிப்பு- வைகோ கண்டனம்!

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு
கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு
Published on

”சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலை மீது  சமூக விரோதிகள் கருப்பு பெயிண்ட் பூசி அவமதிப்பு செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது” என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். 

இன்றைய அறிக்கையில் இதைக் கூறியுள்ள அவர், “தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் கருத்தியல் ரீதியாக மோத முடியாத சக்திகள், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் சிலைகளை அவமதிப்பதும், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலைக்கு காவி வண்ணம் பூசுவதும், தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார். 

”தமிழகத்தின் அரசியல் பண்பாட்டை சிதைத்து அமைதியை சீர்குலைக்க முயலும் இத்தகைய சக்திகளை கண்டறிந்து கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் வைகோ வலியுறுத்தியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com