கரூர்- சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி!

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
Published on

கரூர் விஜய் கூட்ட நெரிசல் கொடூர மரணங்கள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. 

இதில் தேசிய மக்கள் கட்சி உட்பட நான்கு தரப்பினர் பெயரில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிமன்றத்தை அரசியல் களமாக ஆக்கவேண்டாம் எனக் குறிப்பிட்டு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 

வழக்கு விசாரணை தொடக்கக் கட்டத்தில் இருப்பதால் இந்தக் கோரிக்கையை ஏற்கமுடியாது என மறுத்துவிட்டனர். 

மற்றொருவர், ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் கள விசாரணையில் இருந்தபோது, காவல்துறையைச் சேர்ந்தவர் மிரட்டுவதைப் போலக் கைகாட்டியதை நீதிமன்றத்தில் முறையிட்டனர். 

அதற்கு நீதிபதிகள், ஒருவர் செய்ததைக் காரணம்காட்டி மொத்த அமைப்பையும் சொல்லமுடியாது என கருத்து தெரிவித்தனர். 

மொத்தம் ஏழு வழக்குகளில் நான்கு வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

கூடுதல் இழப்பீடு கேட்ட மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com