காங். எம்.பி.க்கு இரத்த அழுத்தம் குறைவு- மருத்துவமனையில் அனுமதி!

சசிகாந்த் செந்திலின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கல்வியாளர் பிரின்ஸ்
சசிகாந்த் செந்திலின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கல்வியாளர் பிரின்ஸ்
Published on

தமிழக மாணவர்களுக்கான கல்வி நிதியை மைய அரசு ஒதுக்காததைக் கண்டித்து திருவள்ளூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் சசிகாந்த் செந்தில் காலவரையற்ற உண்ணாநிலையைத் தொடங்கினார். பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திருவள்ளூரில் நடைபெறும் அவருடைய போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

இரண்டாவது நாளாக சசிகாந்தின் போராட்டம் தொடர்ந்த நிலையில், அவருடைய உடல்நிலையில் பாதிப்பு தொடங்கியது. இன்று மாலையில் அவரின் இரத்த அழுத்தம் குறைந்த நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் கவலைகொண்டனர். 

உடனே அவரை மருத்துவமனைக்குச் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். அவசர நிலை கருதி சசிகாந்த் செந்தில் மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

முன்னதாக, இன்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நேரில் சந்தித்து தங்கள் அமைப்பின் ஆதரவைத் தெரிவித்துக்கொண்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com