தமிழ் நாடு
பா.ம.க. மூத்த தலைவர் ஜி.கே.மணியின் மகனும் திரைப்படத் தயாரிப்பாளருமான தமிழ்க்குமரன் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டார்.
பா.ம.க.வில் இராமதாசால் அதன் இளைஞர் அமைப்புக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அன்புமணிக்கும் அவரின் தந்தைக்கும் முரண்பாடு ஏற்பட்ட நிலையில், அந்தப் பதவியிலிருந்து தமிழ்க்குமரன் விலகிக்கொண்டார்.
அண்மையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தமிழ்க்குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.