காங்கிரசுக்கு மட்டும் இன்னும் தொகுதி இறுதியாகவில்லை- டி.ஆர். பாலு

Published on

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிவிட்டது. 

தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ் இதை இன்று மதியம் உறுதிப்படுத்தினார். 

நண்பகலில் அறிவாலயத்தில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த தி.மு.க. பொருளாளரும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் இன்னும் ஒதுக்கீடு பாக்கி இருக்கிறது என்றார். 

மற்ற கட்சிகளுக்கான ஒதுக்கீடு முடிந்துவிட்டது என்றும் அவர் கூறினார். 

இன்று மாலையில் அனைத்து விவரமும் தெரியவரும் என்றும் பாலு கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com