தமிழ் நாடு
அமெரிக்க நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அதானியின் ஊழல் மோசடிகள் குறித்தும், மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக பிரதமர் மோடி நேரில் சென்று சந்திக்காதது குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தடையை மீறி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றதாக மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் கைதுசெய்யப்பட்டனர்.
இப்போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி உட்பட பல மூத்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.