கிட்னி திருட்டு- 2 மருத்துவமனைகளின் உரிமம் ரத்து!

கிட்னி திருட்டு- 2 மருத்துவமனைகளின் உரிமம் ரத்து!
Published on

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் சிறுநீரகம் விற்றதாக வந்த செய்தியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட விசாரணை குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின்படி 2 மருத்துவமனைகளின் உரிமம் இரத்துசெய்யப்பட்டுள்ளது.

மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை விவரம்:

“தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை செய்திகளில் வரப்பெற்ற முறைகேடான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்து விசாரித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.எஸ்.வினீத், இ.ஆ.ப., அவர்களை நியமித்து 18.07.2025 அன்று ஆணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.எஸ்.வினீத், இணை இயக்குநர் (சட்டம்) மரு.இரா. ம. மீனாட்சிசுந்தரி, இணை இயக்குநர் நாமக்கல் ராஜ்மோகன், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மரு.கே. மாரிமுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் சீத்தாராமன் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.

இக்குழு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, திருச்சி சிதார் மருத்துவனை, பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவான விசாரணை மேற்கொண்டனர். இவ்விசாரணையின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணை அறிக்கையை அரசுக்கு வினீத் அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையின்படி தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவனை, சிதார் மருத்துவனை ஆகியவற்றுக்கு, மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1994 பிரிவு 16 உட்பிரிவு (2) ன்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக நிறுத்திவைக்க, மருத்துவம் - ஊரக நலப்பணிகள் இயக்குநரால் ஆணையிடப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com