தமிழ் நாடு
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை, அடையாறில் உள்ள வீரமணியின் வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் அவரை வாழ்த்தினார்.
பின்னர் அவர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில், ”தமிழினம் விழிப்புறவும் பகுத்தறிவால் மேன்மையுறவும் நாளும் தன் பரப்புரைத் தொண்டறத்தை மேற்கொண்டு வரும் பெரியாரின் பெருந்தொண்டர், தாய்க்கழகத்தின் தலைவர் மானமிகு ஆசிரியர் திரு.கி. வீரமணி அய்யா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
தமிழினத்தின் அரணாக விளங்கும் பெரியாரியக் கொள்கைகளை நாளும் சமுதாயத்தில் விதைத்திடும் ஆசிரியர் வாழிய பல்லாண்டு!” என்று குறிப்பிட்டுள்ளார்.