குரியன் ஜோசப் குழு கலைப்பு- பா.ஜ.க. வரவேற்பு

குரியன் ஜோசப் தலமையிலானன் உயர்மட்ட குழு முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சர்பித்தபோது
குரியன் ஜோசப் தலமையிலானன் உயர்மட்ட குழு முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை சர்பித்தபோது
Published on: 

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, மத்திய-மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவைக் கலைக்க எடுத்த முடிவு, வரவேற்கத்தக்க மற்றும் நடைமுறைக்குச் சாத்தியமான ஒரு நடவடிக்கையாகும் என்று தமிழக பாஜ.க.வின் தலைமை செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

”முந்தைய தி.மு.க.  ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்தக் குழு தேவையற்ற ஒன்றாக, உள்நோக்கம் கொண்டதாக இருந்தது. மத்திய-மாநில உறவுகளை ஆய்வு செய்யவும், தேவையான சீர்திருத்தங்களைப் பரிந்துரைக்கவும், மாநில சட்ட ஆணையம் உட்பட, ஏற்கெனவே நன்கு நிறுவப்பட்ட அரசியலமைப்பு சட்டக் கட்டமைப்புகள், சட்டங்கள் மற்றும் நிறுவன வழிமுறைகள் இந்தியாவில் உள்ளன. அத்தகைய சூழலில், அதே போன்ற பணிகளைக் கொண்ட, சட்டபூர்வ அந்தஸ்து இல்லாத ஒரு கூடுதல் அமைப்பை உருவாக்கியது, தேவையற்ற பணிச்சுமையையும், நிதி விரயத்தையுமே ஏற்படுத்தியது.

இந்திய ஜனநாயகம் பல தசாப்தங்களுக்கு முன் உருவான, நிலைத்தன்மை கொண்ட விதிகளையும், அரசியலமைப்புத் தத்துவங்களையும், சட்டக் கட்டமைப்புகளையும் கொண்டுள்ளது. கூட்டாட்சி சமநிலை தொடர்பான சிக்கல்களைக் கையாள்வதற்கு, ஏற்கெனவே போதுமான மற்றும் முறையான வழிமுறைகள் உள்ள நிலையில், இது போன்ற தற்காலிகக் குழுக்களின் அவசியமின்றி, இந்தக் குழுவைக் கலைத்துவிட்டு, அதன் பணிகளை மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைப்பதன் மூலம், தற்போதைய அரசு தேவையற்ற முயற்சிகளைத் தவிர்த்து, தெளிவையும், உறுதியையும் முன்னெடுத்துள்ளது. த.வெ.க. அரசின் மேற்கண்ட முடிவு பாராட்டத்தக்கது.” என்று நாராயணன் திருப்பதி தன் சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளார்.