குரூப் 4 தேர்வு - 3ஆ.+ இடங்களுக்கு 13 இலட்சம்+ பேர் எழுதுகிறார்கள்!

TNPSC
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி.
Published on

தமிழ்நாட்டு அரசுப் பணியில் நான்காம் பிரிவு- குரூப் டி பணியிடங்களுக்கான தேர்வு இன்று நடத்தப்படுகிறது. 

மொத்தம் 3,935 இடங்களுக்கு 13 இலட்சத்து 89 ஆயிரத்து 738 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர்.  

இதில் கிராம நிருவாக அலுவலர், வனக் காவலர் ஆகிய பணிகளுக்கும் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

மாநிலம் முழுவதும் தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, தேர்வுக்கான கேள்வித்தாள்கள் தனியார் பேருந்தில் வைத்து அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றை ஏ 4 தாளை கதவில் சீல்வைத்து அனுப்பிய தகவல் சமூக ஊடகங்களில் பரவி கடுமையான கண்டனத்தை எதிர்கொண்டது. ஆனால் அதனால் எந்தக் கேள்வித்தாளும் வெளியே கசிய வாய்ப்பில்லை என தேர்வாணையம் மறுத்துவிட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com